பளு தூக்குதலில், சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து சோதனை இல்லை.. மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார் என தகவல்

0 5455
பளு தூக்குதலில், தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

49 கிலோ எடைப் பிரிவில், புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த சீனாவின் Zhihui Hou தங்கம் வென்றார். அந்த போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆனால், சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அவ்வாறு உறுதி செய்யப்பட்டால், அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, மீராபாய் சானுவுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், அப்படி சோதனை ஏதும் நடத்தப்படவில்லை. எனவே, இந்த குறிப்பிட்ட போட்டியில் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments